வனத்தின் இடையே-தன்
வாழ்வின் துக்கத்தை
இசைத்துப் போகிறதொரு பறவை
பட்டுப்போன மரங்களின்
மொட்டைக் கிளைகளில்
நெளிகிறது வெயில்
சருகுகள் நொறுங்குகின்றன
அரவத்தின் ஊர்தலுக்கு
கண்கள் பூத்துப்போயின
பச்சையாயொரு தளிர் தேடி
ஓடை ஓடிய தாரைகளில்
ஒளிர்கின்றன கூழாங்கற்கள்
நீலவானில் கலைகிறதொரு
வெள்ளை மேகம்
No comments:
Post a Comment