பயத்தின் சகடம்
ஓயாது உருளும்
மனங்கொண்டவனின் வெளியில்
நம்பிக்கையின்மையின் பூதங்கள்
பசியோடு அலைந்து கொண்டிருந்தன
இரவின் துர்க்கனவுகளில்
விரியும் நிலத்தில்
ஓயாது பொழியும் வெயிலருந்தி
அடரும் நஞ்சொடு
நாகம் காத்துக்கொண்டேயிருந்தது அவனுக்காக
திசைகளின் கதவுகளை
இழுத்துப் பூட்டிக்கொண்டவன்
வெளியைச் சுருக்கி
கூரையாக்கிக் கொண்டவன்
பகலின் திரியில்
இருட்டை ஏற்றிக்கொண்டவன்
கதவிடுக்கு நூலாம்படையாய்
ஒளிய விழைபவன்
தாழா புழுக்கத்தில்
திசைகள் தகர்த்துப் பாய்ந்தான்
காலத்தின் ரசவாதம்-அவனைத்தான்
காவல் தெய்வமாக்கியது
1 comment:
nalla irukda
Post a Comment