Apr 20, 2015

உன்னையே

உன்னையே
காடு மலைகளின் வழியே
கடுந்தொலைவு சுமந்தேன்

பாதைகளின் மேலே
கரும்பச்சையாய் மின்னியதும்
வழியே
சருகாய் கிடந்ததும்
கீழே
மோனத்தவத்தில் இருந்ததும்
நீயே

அருந்திக் குறைவுண்டது
வளர்ந்தது
கண் விழித்தது
உயிர்மையின் தானியம்

ஓடை அருவி
ஏரி ஆறுகளின்
வழியே
அடையாளம் அழித்தேன்
சங்கமமென்றது கடல்

விழுங்கியது மீன்
ஆடியது கடல்
கூடியது மேகம்

காடு மலைகளின் நடுவே
ஏன் எப்படி’
ஒரு பாதை?

No comments: