Apr 13, 2015

அலை நு(ந)ரை

யுவதிகள் கடக்கும்
முச்சந்தியில் கேட்கிறது
பருவத்தின் பிரிவொலி

அதென்ன..
பின்புறம் நீளும் நிழலை
முதுமை தழுவுவதுபோல்
ஒரு குறுகுறுப்பு?

நான் பார்த்துக்கொண்டேயிருக்க
இந்த யானை
சிறு புள்ளிக்குள்
உடலை மறைக்கத் தொடங்குகிறது

இப்போது
கனவுகள் மறப்பதில்லை
மூளையில்
மருக்களாய் தொங்குகின்றன.

குழந்தைகள்
முச்சந்தியை கடக்கும்போது மட்டும்
பிரபஞ்சம் தேயும் ஒலி
மெலிதாகவே கேட்கிறது.

No comments: