ஓசையற்று ஊடுருவும்
மங்கிய ஒளி
சுவர்களுக்குள் சேர்ந்துகொண்டிருக்கும்
அமைதி
பழுது நீக்கியிருந்திருக்க வேண்டிய
குழாயிலிருந்து சொட்டும்
நீரின் ஓசையானது
அமைதியில் மோதி
இல்லம் முழுக்க எதிரொலிக்கிறது
இதயம் பதற
நாற்காலியில் கிடக்கும்
தவிப்பின் ஆண் சிலைக்கு
காதற்பெண் சிலை
முதுகுகாட்டி விழித்திருக்கிறது
தவிப்பின் முள்ளை
களைய விடாமல்
இறுக்கத்தில் ஒன்றென்று ஆகிவிட்டன உதடுகள்
சொற்கள் ஒழுகாத தொண்டையில்
அடைத்திருக்கும் அன்பின் சிடுக்கை
முட்டித் தப்பிக்கின்றன பெருமூச்சுகள்
நீண்ட யுகங்களுக்கு எதுவும் நிகழவில்லை
எதிரொலி அடங்கியபோது இல்லம் குளமாகியிருந்தது
பிறகு
நீருக்குள் இரண்டு மீன்சிலைகள்.
No comments:
Post a Comment