சுடுபகல் கொடும்பாலை காற்றலையும்
கானகம் கடக்கையில்
நீர்க்கண்ணுறங்கும் புற்றிலிருந்து
பெரு நாகம் படங்கொண்டது.
நிலம் நிதம்பமாய் பிளவுற
வெக்கை மேகங்கள்
ஸ்தனங்களாய் திரண்டன.
பெட்டையும் சிட்டும்
புன்சிரிப்பை கிளைவிட்டு பறக்க
வாய்விரித்து
கொக்கானி காட்டுகிறது ஓணான்
தீராக்காமம்
உமிழாயும் கண்ணீராயும் வழிய
வேலியோரக் கள்ளிச்செடியின் மீது
நஞ்செறிந்து நடந்தான்.
வேர் செத்த கணத்தில்
பெட்டையும் சிட்டும்
கள்ளி மீது வந்தமர
குளிர் திரும்பும் கானகத்திற்கு
அவன் திரும்ப வரப்போவதில்லை
No comments:
Post a Comment