1)
தாபம்.
உடைகள் உதிர்த்த நிர்வாணம்
பாலின் வாசனை கொள்கிறது.
ஆயிரமாயிரம் வேர்கள்
மேனிப்பெரு நிலத்தை
துளைத்துயிர்க்கின்றன.
முத்தங்களில் மிச்சமாகும் எச்சில்
தசையின் சுவை கூட்டுகிறது.
காமத்தின் நுரைக்குமிழ்கள்
கற்பாறைகளாக
பரஸ்பரம் தேகங்கள்
மதுக்குப்பிகளாகின்றன.
அணுக்கள் கடத்தும் நரம்புகளின்
ஆகக்கூடிய மென்மையை
கண்ணீர் நரம்புகள் எய்துகின்றன.
2)
பேரன்பு கொண்டவன் நான்
என்னைக் கடக்கும்
இவளிடம்
இந்த நாயிடம்
அந்த பிச்சைக்காரனிடம்
உரத்துச் சிரிக்கும்
தெருமுனை சித்தனிடம்
என்னைத் தொந்தரவுபடுத்தாத
எதனிடமும்.
3)
உன் முலைபிளவுக்குள்
முகம்பதித்து
அழுகை தணிக்கத் துடிக்கும்
குழந்தைதான் நான்
துளிக்காமம் தடுக்கிறது
No comments:
Post a Comment