Oct 20, 2024

குறுங்கவிதைகள்

உதிர்ந்து கிடக்கும்
சிறகின் மீது
கவிந்து கிடக்கிறது
அதன்
வானம்

**
புல்லாங்குழல் விற்பவன்
குழலூதுகிறான்

உமக்கு
இசை தெரிகிறதா?
பசி தெரிகிறதா?
**
அழுகிறது
நரமாமிசம் தின்பவனின்
முன்னிருக்கும்
குழந்தை.

**
பின் மதியத்தின்
மோனத்தவத்தில் இருக்கிறது
அணிலாடும் தரு

நறுமணத்தைலம் பூசி
நீராடிக் கொண்டிருக்கிறாள் ரதி

தருவின் நிழலெடுத்து
தாபம் தணிக்கிறான் தேவன்.

No comments: