புலன்கள்
திக்குக்கொன்றாய் இழுக்க
பூமி இன்னுமொருமுறை புரள
நரம்புகளெங்கினும்
கொடுவெப்பம் ஏற
கூத்தனின் பாதம்
தலைமேல் ஆட
துளைகளின் வழி
ஊழி உள்ளேற
உச்சத்தில்
சில்லுகளாய் சிதறி
விழிக்கிறான்
தரிசனச் சுவையில்
உரத்த சிரிப்பினிடையே
நம்முன் விழுகின்றன
அவன் கேள்விகள்
நாம் சங்கிலிகளைத் தேடுகிறோம்.
No comments:
Post a Comment