Oct 20, 2024

ஏர்முனை

எம்பதடிக் கெணத்த
எட்டிப்பாத்தா
காஞ்ச கரும்பாறத
கண்ணுக்குத் தெரியுது.

கடுந்தீப் பொகையாட்ட
நெளியுது
காத்தெழுப்பும் புழுதி.

வட்டியிருக்குது
கள்ளிக்காடாட்டம்

காயத கண்ணோட
காஞ்ச வானம் பாக்கற
காணியாளன் நெஞ்சுல
உழுதுக்கிட்டு இருக்குது
துருப்புடிச்ச ஏர்முன

No comments: