கணங்களில்
மரணத்திற்கு அருகாமையிலிருப்பவனின்
சீற்றம் போல்
இத்தனிமை உக்கிரங்கொண்ட பொழுதில்
விட்டங்களில் புலப்பட்டன
சில நிழல்களின் முதுகுகள்
சிறுதுளி ஒளிக்காவது ஆவலாய்
ஜன்னல் திறந்தவனை வெறித்தது
நட்சத்திரங்களால் கழுவப்படாத இருள்
புறத்தை இழுத்துப் போர்த்தியேனும்
தப்பலாமென்று கதவிழுக்கையில்
ஏழெட்டுப் பூட்டுகளை விட்டுப்போயிருந்தாள்
தனிமையின் துர்தேவதை
நிழல்கள் கீழே குதித்துவிடுமுன்
இறுதிப்பற்றுதலாய் துணைக்கழைத்தது
உன் இசையை மட்டுமே
வெளியேறுதல் மறந்தேன்
வெளி உள்ளேற.
No comments:
Post a Comment