Oct 20, 2024

நீ பேசவியலாத

நீ பேசவியலாத
சொற்களின் திரவமாய்
வழியுமிந்த கண்ணீரின்
இருமை கூடிய ஆழக்கசப்பு
நாவில் படர்கிறது

அதன் பெருந்துயரில்
நிகழ்கணம் நம்பிக்கையற்றதாக
ஊசலாடுகிறது

அதன் வெம்மை
என் சமநிலைக் கனிகளை
அழுக வைத்துக் கொண்டிருக்கிறது

கரைந்தொழுகும்
உன் முகமூடிகளின் துர்நாற்றமோ
சகிக்க முடியாததாகவிருக்கிறது

யாவற்றையும் விட
உன்னையொரு குழந்தையாய்
எதிர்கொண்டதின் அதிர்வை
இந்தப் புளிப்பேறிய மதுக்கோப்பை
உற்றுப் பார்ப்பதுதான் பயமாயிருக்கிறது.

No comments: