Oct 20, 2024

கணிதம்

கணிதம் வியாபித்த உறவுகள்
லாபமீட்ட வெறிகொண்டலைய
வெளியெங்கும் தூசிப்படலமாய்
சூத்திரங்கள் மிதக்கின்றன

சொற்களின் இடையில்
கணிதக்குறிகள்
புன்னகையாய் தழும்புகின்றன

எல்லாமே வகுபட்டுக் கொண்டிருக்கின்றன
எண்களால்

மாயச்சரடாய்
காற்றையும் திசைகளையும்
சூழ்ந்திருக்கிறது முடிவிலி

எப்போதும் தன் கணக்கில்
பூஜ்யத்தை மட்டும்
விடையாகப் பெறுபவன்
அதன் வளையத்திற்குள்
அலைந்து கொண்டிருக்கிறான்
வெளியேற முடியாத
எலிக்குட்டியாய்.

No comments: