Apr 14, 2015

கடல் நினைவு-2

கடல் மீதான ஆகாசத்தில்
நிற்கிறது புலி
இருளின் நிறத்தில்
முக்காடிட்டிருக்கும் சாத்தானின்
ஆசிர்வாதம் இறங்கும்
பின்ன கணத்தில்
புலி உறுமத்துவங்க
கண்கள் மயங்குகின்றன
ஐயோ..உடல் எங்கே?
தசைத்திரளைக் காணவில்லை
ஆண்குறி மட்டும்
எப்படி இன்னும்’
தசையாகவே இருக்கிறது?
இதோ இப்போது
காற்றின்
ஒளியின்
வேகத்தில்
புலி வருகின்றது
அதே பொழுதில்
ஒளிரும் நிலவொளியில்
அசைந்து வருகிறது
ஒரு நிழல்
 
      நான்
நிழல்  புலி
 
என்று நிற்கும் போது
எதிரில் தன் உடல் மொத்தமும்
ஒரே அலையென்றாகி
தரை துறக்கிறது
கடல்.

No comments: