இப்பூக்கள்
தம்மை மணலாய் உதிர்த்துக்கொள்கையில்
இப்புகைப்படம் தன்னிலிருந்து
காலத்தையும் உருவத்தையும்
உதறிவிட்டு அம்மணமாகிறது
மதிலின் மேலிருந்த பூனை
குதிக்கும் சப்தத்தில்
கண் திறக்கத் துவங்குகின்றன
பழுப்பு வண்ண நினைவுகள்
எரிக்கப்பட்ட நினைவுகளிலிருந்து
சிதறும் சாம்பற்துகள்கள்
மேகங்களின் கருவெளியில்
புதைகையில்- நான்
பத்தாயத்தில் மீந்த
ஒற்றை நெல்மணியாகிறேன்.
No comments:
Post a Comment