மூன்றாம் பிறையின்
மிச்ச இருட்டில்
பிரியத்தின் மென்மையும்
நிராகரிப்பின் தீத்தழும்பும் கொண்ட
நேசத்தின் கண்ணீர்த்துளிகளை
கூழாங்கற்களாக்கி
நினைவின் நதியில் விடுகிறேன்
தன் ஆழத்தில்
எரியத்துவங்கும் கூழாங்கற்கள் கண்டு
குலைந்த நதியோ
தறிகெட்டுப் பாயத்துவங்குகிறது
மேட்டுத்திசையில்.
No comments:
Post a Comment