சொற்கள் தீர்ந்த கணத்தில்
தவிக்கத் தொடங்கின
நான்கு கடல்கள்
பேராற்றின் விசையில்
காலம் நழுவ
மலர்ந்த உடல்கள்
ஒலித்தடங்கிய வீணையின்
காற்றலையும் அதிர்வுகளாக
ரோமப்புல்வெளியிலிருந்து
சடசடத்துப் பறக்கின்றன
ஒளிப்புறாக்கள்
மெழுகொளியில் நிகழும்
தசைகளின் நடனம்
ஆதித்தாகத்தின் ஓவியமாக
உன் மாரிடை
வந்துபுதைந்த மேகங்களை
நான் விழுங்கத்துவங்குகையில்
செம்புலத்தின்
நிலவொளி மழையில்
பிணையும் சர்ப்பங்களைக் கண்ட
சிறுவனின்
முதல் காமம்
மெல்ல
பசியடங்கத் துவங்குகிறது.
No comments:
Post a Comment