நிழல் எழுதிய
ஒளியின் வரிவடிவங்கள்
பிணமேட்டில் தலையசைக்கும்
பூ
குகைச்சித்திரத்திலிருந்து
உயிர்த்தெழ முடியாதவளின்
கண்
கொலையுண்டவனின் ரத்தத்தை
கழுவும் மழை
கழுத்தறுபட்ட பொம்மை
குழந்தைகளின் அழுகுரலில்
மரிக்கும் தேவதைகள்
எங்கெங்கும் கவியும்
மரணத்தின் பச்சைய வாசனை
தாளாமல்
நள்ளிரவில் தனித்தலைபவனின்
கண்ணீரில் உப்பில்லை
மொத்தமும்
ரத்தம்.
No comments:
Post a Comment