Apr 13, 2015

சில குற்றங்கள்

சில குற்றங்கள்
சட்டபூர்வமாக்கப்பட்ட செய்தி
தாளிலிருந்து குதித்து
தெருவில் போகையில்
பூக்காரம்மாவின் கூடையிலிருந்து
உதிர்ந்த வண்ணங்கள்
பறப்பதைப் பார்க்கிறது
நிறமற்ற பூக்களை
அவள் தெருவில் சரித்துப்போக
அவியும் நிலத்தை
ஏளனமாக பார்த்த அது
சூரியன் தன்னை எரித்துக்கொள்ளும்
உச்சிவெயிலில்
அதன் கண்ணெதிரே
வெட்டுப்பட்டவனின் குருதியில்
குதியாளமிடுவதைப் பார்த்த இக்கவிதை
திடுக்கிடலில் “சரக்” கென
தன் தலையை
ஓட்டுக்குள் இழுத்துக்கொள்கிறது.

No comments: