Apr 13, 2015

அந்தியில்

அந்தியில்
என்னைக் கடப்பவளின் உடலிலிருந்து
உயிர்த்த வண்ணத்துப்பூச்சியிலிருந்து
கிளர்ந்தெழும் கன்னிமையின்
வாசனையில்
நான் தாவரமாக
சட்டெனப் பூத்த
தாபத்தின் நீலமலரில்
வண்ணத்துப்பூச்சி
அமர்ந்த நொடியில்
பெருங்கழுகாகி
ராட்சதக் கால்களில்
அவளைக் கவ்விக்கொண்டு பறக்க

நீலமாய் எரியத்துவங்கினேன் நான்.

No comments: