Apr 13, 2015

இக்கானக மூங்கிற்துளைகள்

இக்கானக மூங்கிற்துளைகள்
பகலின் தீரா வெம்மையில்
கல்லறைகளாகின்றன

கண்விழிக்கும்
இரவின் கணங்களிலோ
குறிஞ்சியின் சரிவெங்கும்
எரிந்து கொண்டிருக்கும்
துயரக் கருமலர்கள் கண்டு
பேரோலமிடத்துவங்குகின்றன.

No comments: