Apr 13, 2015

ஈர நிலவொளியில்

ஈர நிலவொளியில்
வான் நெகிழ்த்திய
மண்ணின் சிறு குளங்களுக்குள்
காலடியின் ஓசைக்கு
தாவி மறையும்
தவளைக்குட்டிகளே

கோட்டை நிலாவைச் சுற்றி
பக்கத்தில் கட்டினால்
மழை
தூரத்தில் பெய்யுமென
அம்மா சொல்லியிருக்கிறாள்

No comments: