Apr 13, 2015

திரு x ன் வேட்டை நாய்

சமயங்களில்
திரு x அவர்களின்
வேட்டை நாய்க்கும்
அம்சம் கூடிவிடுகிறது
24/7 ல் போஷிக்க
வாலில்லாதவர்கள் இருக்கிறார்கள்
எலும்போடு கறி
அன்னாருக்கு எப்போதுமுண்டு
தனிமை வாய்க்கையில்
சிம்மாசனத்தில் மல்லாந்து
ஓய்வெடுக்கவும்
ஓய்ந்தபோது காலை(ஒன்று!)
தூக்கி
ஆசிர்வதிக்கவும் பழகிக்கொண்ட பின்
சரமாரியாய் விழுகிறது கும்பிடு
X அவர்களின் எல்லைவரை
வாலாட்டிக்கொளவது
அவ்வப்போது இனாம்
உறுமி மிரட்டுவதோ
கடித்துக் குதறுவதோ
முகக்குறிப்பிலிருந்தே செயலாற்றுகையில்
மகிழும் திரு X ன்
வருடலில் பூரித்து
குட்டி யானையாய்
திமிறி அலையுமதற்கு
நசுக்கப்பட்ட விரைகள்
பற்றிய ஞாபகங்கள்
இப்போது ஏதுமில்லை.

No comments: