மந்தையின்
முதல் ஆட்டிற்கும்
கடைசி ஆட்டிற்கும்
பெரிய வித்தியாசங்கள்
ஏதுமில்லை
புத்திசாலித்தனமான மூளையையோ
தீரமிக்க இதயத்தையோ
எப்படி
கடைசி ஆடு கொண்டிருக்கவில்லையோ
அப்படியேதான்
முதல் ஆடும்
அவ்வண்ணமேதான்
மந்தையும்
ஆனால்
மந்தையினுள்
ஒரு
முதல் ஆட்டை
எப்போதும்
ஒன்றே ஒன்றுதான்
தீர்மானிக்கிறது.
No comments:
Post a Comment