கணிணித்திரையில் ஒளிரத்துவங்கும்
XXX திரைப்படத்தில்
சட்டென விரியும்
பாழடைந்த மாளிகைக்குள்
நாயகனும் நாயகியும்
முத்தமிடத் துவங்கும் மறுகணம்
நிர்வாணம் எரியத்துவங்குகிறது
நாயகனின் புஜத்திலும்
நாயகியின் பிருஷ்டத்திலும்
வரையப்பட்டிருக்கும் டேடூ மிருகங்கள்
உடல் பெற்றிறங்கி
பரஸ்பரம் ஆரத்தழுவி
பிதற்றும்
அர்த்தங்களற்ற மொழியில்
பூக்கிறது
கிளுகிளுப்பின் மலர்
விதவித கணிதகோணங்களில்
தம் வினோத உடல்களை
பொருத்திக்கொண்டு
இயங்கியலையும் மிருகங்கள்
உச்சத்தில் அலறித் தளர்ந்தபின்
நாயகனிடம் திரும்பவேண்டிய
டேடூ மிருகமோ
திரையை தாண்டிக்குதித்து
வந்து படர்ந்துவிடுகிறது
என் புஜத்தில்.
No comments:
Post a Comment