சம்பலாங்கி பறவையின் வனத்தில்
உயிர்க்கிறார்கள்
மரித்த கன்னிகள்
தீண்டப்படாத கன்னிமையின்
கருமைச்சுகந்தம் நுகர்ந்த
உயரக்கழுகுக்கு மூண்டெழுகிறது
தற்கொலையின் பெருவிருப்பு
உடலற்ற நிர்வாணமும்
காலமற்ற வெளியும்
கூடிய கணத்தில்
உடலைத் தொடர்ந்திருந்த
வேட்டைகளின் வெறிக்கூவல்
கன்னிகளுக்கு எதிரொலிக்கும்போது
அவர்களின் பிரார்த்தனையோ
தம் யோனிகளைச் சூலிட்டிருந்த
உன்னதங்களைச் செரித்த
நிலத்தின் தேம்பல்
வனாந்தரத்தைத் தாண்டிய
வீடுகளில் வசிக்கும்
பூப்படையா சிறுமிகளுக்கு
கேட்டுவிடக் கூடாதென்பதுதான்.
No comments:
Post a Comment