அந்திமகால ஒட்டகங்கள்
மூப்பின் துர்வாசனையோடு
காட்சிப்பொருளாய் நடக்கும்
நகரத்தின் சிமெண்ட் தெருக்களில்
மங்கைகள் இறகுப்பந்து விளையாடுகிறார்கள்
ஆராவரக் கூச்சலிடும் சிறுவர்களின்
இன்றிரவுக் கனவுகளில்
ஒட்டகத்திற்கு சிறகும் முளைக்கக்கூடும்
நீண்ட பால்கனிகளின்
கைப்பிடிச் சுவர்களெங்கும்
உறைந்துவிட்ட வெயிலின் மீது
மேகங்கள் விதைக்கும்
சிறுநிழற் தானியங்களை
பொறுக்கும்
தனிமையின் கண்கள் அறிந்துவிட்ட
ஒட்டக நினைவின்
பாலையில் அலையடிக்கும்
பெருங்குளத்தில்தான்
மீன்களே இல்லை.
No comments:
Post a Comment