பகடைகள்
உருள்கின்றன
ஒளிர்பவை
எல்லாம் மயங்குகின்றன
பகடைகள்
உருள்கின்றன
தலை
துண்டிக்கப்பட்ட
முண்டங்கள்
துள்ளியடங்குகின்றன
பகடைகள்
உருள்கின்றன
கதவடைக்கப்பட்ட
உறக்கத்திற்குள்
பிசாசென
துர்க்கனவுகள் அலைகின்றன
பகடைகள்
உருள்கின்றன
குழந்தைகள்
வீட்டிலிருந்து
நிரந்தரமாய்
தொலைகிறார்கள்
பகடைகள்
உருள்கின்றன
நாய்க்குட்டி
செத்துக்கொண்டிருக்கிறது
பகடைகள்
உருள்கின்றன
கரங்கள்
பகடைகளை உருட்டுகின்றன
பகடைகள்
காற்றில்
உருண்டுகொண்டேயிருக்கின்றன.
No comments:
Post a Comment