நிலவெளியை
வளையம் போல்
ரயில் கடக்கையில்
நிறம் வெளிறிய
மஞ்சள் கம்பிகளை
பிடித்தவாறே
படிக்கட்டிலிருந்தேன்
அறுப்பு
முடிந்த வயலில்
குறும்பாடு மேய்த்தவாறே
கழுத்துயரக் கவையில்
முகம் தாங்கியிருந்த
கிழவரைத் தாண்டி
சீருடை
களைந்திராத சிறுவன்
கூச்சலிட்டு ஓடிவந்து
ரயிலுக்கு கையசைத்த போது
இடம் மாறி
கிளர்ந்திருந்தது
ஒரு வானவில்
No comments:
Post a Comment