சாவின் நிழல்
பதுங்கியிருக்கும் மருத்துவமனையில்
தாதியின்
உடை வெண்மையை வெறிக்கின்றேன்
வெளியேறும்போது அவள் சிந்தும்
புன்னகையில்
வாழ்வின் பெரும் ரகசியமொன்று
இருப்பதாக தோன்றுகிறது
களைப்பூட்டும் மருந்துகளின்
வினோத மணத்தை நுகர்ந்துகொண்டே
தூரத்தில் தேயும்
காலடியோசையின் மீது
பெருங்காம்ம் கொள்ளும்போது
இந்த அறையில் துவண்டிருக்கும்
முதிய உடல்
மெல்ல முனகுகிறது
வெளியே காலடியோசை
இப்போது நெருங்கிக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment