Oct 26, 2024

மண்ணிலவு

சட்டென்று மீண்ட
மஞ்சள் நிலவின்
தாளாத தண்ணொளியில்
அவனுக்குப் பைத்தியம் பிடித்தது

தேய்தலும் வளர்தலுமின்றி
இரவிலும் பகலிலும்
மண்ணில் கிடந்து புரள்கிறது
அதே நிலவு.

No comments: