Apr 20, 2015

அயக்கம்

ஒவ்வொரு
முறையும்
பிழையின்றி
தீர்க்கத்தோடே
சுண்டினாலும்
நாணயத்தின் புறங்களிலிருந்து
பூவும் தலையும்
தனித்தனியாக
தெறித்துப் போவதே
சுழன்று இறங்கும்
என் விதியின்
அதி ரகசியமாய்
இருக்கிறது.

No comments: