Apr 20, 2015

களி கூர்தல்

உள்ளறைகளின்
விளக்கணைத்து
வெளி நீண்ட
பால்கனியில்
கிடக்கையில்
பொங்கி நகரும்
பூரணசோபையின்
அபூர்வத்தில்
களி கூர்ந்தேன்

நற்பேறு
எழுத வைத்திருந்த
வெண்தாளில்
சொல்லின் நிழல்
மிதந்து போகாதது.

No comments: