நீண்ட
வளித்தடத்தில்
ஒரு பொழுது
பனியும்
பின் பொழுதில்
ஒளியும்
இறங்குகின்றன
பனி வந்து பெய்ய
உண்ணும் ஒளி
மறைகிறது
விரல் நுனியில்
ஏந்தினால்
ஒளிக்கீற்று சுடுகின்றது
பனித்துளி குளிர்கின்றது
மேலும்
இலைகளைப் போல் ஆவதில்லை
விரல் நுனிகள்
மேலும்
மேலும்
பனித்துளியைப்போல் ஆவதில்லை
ஒளிக்கீற்று
அது போகும் போது
எனக்கொரு மிட்டாய் கூட
கொடுப்பதில்லை.
No comments:
Post a Comment