நித்ய விலங்கு

சாஸ்வத மிருகம்
மண்ணில் அலைகிறது

இளைக்காத
பெரும் பிறப்பு

தசைக்கோளம்
பழுதுறா எந்திரம்

அழியாதது
அனாதை என்று
கைவிடப்பட்டுத் திரிகிறது

துயரம்
அதற்கு

யாசிக்க
ஒரு
பொல்லா
வினையோனுங் கூட

பூ
கீ
மே
லோகங்களில் இல்லை


யிரோ
டலோ
டு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence