இடுகைகள்

டிசம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரவேற்பு

இன்னும் கொஞ்சம் பச்சையை நோக்கிய உந்துதலோ வேறெதுவோ அதனை வழிதவற வைத்துவிட்டது நிமிர்ந்து பார்க்கையில் மந்தையைக் காணாத ஆட்டை அச்சமே முதலில் பீடிக்கிறது இதயத்தின் திடுக்கில் அதிரும் தவிப்பு குரலில் கனத்து ஒலிக்கிறது மேற்கில் நாலெட்டு கிழக்கில் நாலெட்டு வடக்கில் நாலெட்டு தெற்கில் நாலெட்டு நின்ற இடம் திரும்பி பின்னும் திசை துழாவும் கண்களுக்கு சட்டென்று புதிர்வழியாய் மாறிவிடுகிறது நிலம் பொன்னந்தி மேகத்தில் ஒரு ஆட்டைக் கண்டு துளிர்விடும் அதன் நம்பிக்கையை ஏமாற்றிவிடுகிறது இரவு மந்தைக் கதகதப்புக்கான ஏக்கத்தோடு புதர்தேடி ஒண்டுமதற்கு பயமாகவும் இருக்கிறது எல்லாம் புதிதாகவும் இருக்கிறது பட்டியற்ற படுக்கையில் அசைவாங்கும் ஆடு அனிச்சையாய் தலையுயர்த்திப் பார்க்கையில் இத்தனை நாள் காணாத கோடானு கோடி நட்சத்திரங்கள் இரவின் பிரத்யேக ஒலிகள் பிறகொரு நிலவின் நடையையும் வைக்றையையும் சூரியோதத்தையும் கண்டவாறே படுத்துக்கிடக்கையில் மேய்ச்சலுக்குத் திரும்பிய மந்தையின் வாசனை பிடித்துவிட்ட ஆடு மே மேவென்ற உற்சாகப் பாடலோடு வேகமாக ஓடி வருகிறது நிமிர்ந்த மந்தையாடுகள் அத்தனையும் ஒரே ...

இருமுனை-தூயன்

படம்
                                                                      கடந்த சில ஆண்டுகளாக கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருக்கும் புதியவர்கள் பலர் தங்கள் படைப்புகளைத் தொகுக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஒரு புதிய தலைமுறையின் தொடக்கம். தமிழ்ச் சிறுகதையின் நூற்றாண்டுத் தருணத்தில் யாவரும் பப்ளிஷர்ஸ் போன்ற பதிப்பகங்கள் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய தொகுப்புகளைப் பதிப்பிக்கின்றன.

எஞ்சுதலின் சாட்சியங்கள்

படம்
                                                            நீண்டதொரு பரிணாம வளர்ச்சியைக் கொண்ட மனித நாகரீகம் காலச்சகடத்தின் சுழற்சியில் எண்ணற்ற முறை நோய்வாய்ப்பட்டு இருண்டகாலத்தில் புதைந்து கிடந்திருக்கிறது. அழுகிய தன் உடலின் பாகங்களை வெட்டியெறிந்துவிட்டு பின் அதுவே மீண்டுமிருக்கிறது. தான் பின்பற்றிய நீதியையும் அறத்தையும் பரிசீலித்து மாற்றிக்கொண்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பண்படைதல் என்னும் இலக்கை அடைய மானுடம் போராடிக்கொண்டிருக்கிறது.

நூல்கள்

படம்
அமேசான் கிண்டில் பிரதிகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும் உலகில் ஒருவன் நாவல் தக்கை வெளியீடு                                                       மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் கவிதைகள் காலச்சுவடு பதிப்பகம் புலியின் கோடுகள் கட்டுரைகள் தக்கை வெளியீடு