இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எல்லோருக்கும் பெய்யும் மழை-வண்ணநிலவன் நாவல்கள்

படம்
நாவல் என்ற இலக்கிய கலைவடிவம் தோன்றி சுமார் முன்னூறு ஆண்டுகள் ஆகியுள்ள காலப்பரப்பில் உலகெங்கும் நாவல் வடிவம் மானுடத்தின் புறவரலாற்றோடு அகவயமான வரலாற்றை பதியவும்,பரிசீலிக்கவும் புனைவின் வழி மறுகட்டுருவாக்கவும் செய்யவும் தகுந்தாக மாறியிருக்கிறது. ”நாவலின் வரலாறு என்பது மானுட விடுதலையின் வரலாறு” என்கிறார் ஒரான் பாமுக்.மேற்கில் தொழிற்புரட்சி காலகட்டத்திலும்,உலகெங்கும் பின்காலனிய சூழலிலும்,லத்தீன் அமெரிக்கா மறுமலர்ச்சியின் போதும் நிகழ்ந்த சமன்பாட்டுக் குலைவுகள் இந்த வடிவத்திற்கு புதிய திசைகளை உருவாக்கின.