இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புரள் நாவின் பொதுமொழி

படம்
கொஞ்ச காலத்திற்கு முன்பு lingua Franca என்ற வார்த்தையை முதன்முதலாக எதிலோ படித்தேன்.எதிலென்று சரியாக நினைவிலில்லை.வழக்கம்போல பெருந்தெய்வம் கூகிளிலும் சிறுதெய்வம் விக்கிப்பீடியாவிலும் தேடியபோது விரிவான தகவல்கள் கிடைத்தன.டவுன்லோடு ரைட்டிங் செய்யக்கூடாது என்று வலிந்து கொண்டிருப்பதால் இணைப்பு மட்டும் இங்கே.. http://en.wikipedia.org/wiki/Lingua_franca

மூன்று இளைஞர்கள்

படம்
சமீபத்தில் மூன்று நாவல்கள் வாசித்தேன்। நாஞ்சில் நாடனின் “என்பிலதனை வெயில் காயும்”. சா.கந்தசாமியின் “சூரிய வம்சம்” மற்றும் யூமா.வாசுகியின் ”மஞ்சள் வெயில்”.இவற்றில் சூரிய வம்சம் தவிர மற்ற இரண்டையும் முதல் முறையாக வாசித்தேன். என்பிலதனை வெயில் காயும் , சூரிய வம்சம் ஆகிய இரண்டு நாவல்களையும் ஒரே சேர வாசித்தபோது அவற்றில் சில ஒப்புமைகளையும் அவற்றிற்குள்ளிருக்கும் நுண்ணிய வேறுபாடுகளையும் உணர முடிந்தது.இரண்டு நாவலிலும் ஏறக்குறைய ஒரே சூழலில் உள்ள சிறுவர்கள் அல்லது இளைஞர்கள்.என்பிலதனை வெயில் காயும் சுடலையாண்டியை வாழ்க்கை இருமை நிரம்பிய திசையிலும் சூர்ய வம்சம் செல்லப்பாவை ஒளி நிரம்பிய திசையிலும் செலுத்துகிறது.