Posts

Showing posts from May, 2015

நெருப்பில் உருப்பெறும் இருட்சித்திரங்கள்

Image
       எட்டு நெடுங்கதைகளைக் கொண்ட கே . என் . செந்திலின் அரூப நெருப்பு தொகுப்பின் கதைகள் மனித உறவுகளில் சமூகத்தால் விலக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளைப் பற்றிப் பேசுபவையாகவும் புனிதம் என்னும் மேற்திரையை விலக்கி மனங்களுக்குள் அடிப்பிடித்திருக்கும் கசடுகளைக் காண்பவையாகவும் இருக்கின்றன . தொகுப்பின் முதல் கதையான தங்கச் சிலுவையைத் தவிர்த்த ஏனையவை குடும்பங்கள் மற்றும் தனிமனிதர்கள் சிதைவுறும் வாழ்வின் இருண்ட பக்கங்களைச் சித்தரிக்கின்றன .

முரண்மெய்மை வெளியில் அலைவுறும் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்

Image
                                               தத்துவத்துறையில் ஒரு பிரதியின் பொருள்விளக்கத்திற்கான முறைமைகள் அல்லது புரிதலுக்கான உத்திகளைப் பற்றி பேசும் துறையானது ஹெர்முனாட்டிக்ஸ் (hermeneutics) என்று அழைக்கப்படுகிறது. மார்டின் ஹெய்டிகரால் முன்வைக்கப்பட்ட ஹெர்முனாட்டிக்ஸ் வட்டத்தை “ஒரு முழுப்பிரதியைக் குறித்த ஒருவருடைய புரிதலென்பது அப்பிரதியின் தனித்த பகுதிகளின் மீதான புரிதலின் அடிப்படையிலும் தனித்த பகுதிகளைக் குறித்த புரிதலானது முழுப்பிரதியின் மீதான புரிதலின் அடிப்படையிலும் நிறுவப்படுகிறது. ஒன்றையொன்று உசாவாமல்(reference) முழுப்பிரதியையோ அல்லது பிரதியின் தனித்த பகுதிகளையோ விளங்கிக்கொள்ள இயலாது” என்பதாக விக்கிப்பீடியா வரையறுக்கிறது.

சிறுபழுதோடும் மிளிர்கல்

Image
பொதுவாக எங்கள் ஊரும் சுற்றுவட்டாரமும் வறண்ட பிரதேசம். வறண்ட என்ற சொல்லுக்கு நீங்கள் முழுப் பாலைவனத்தைக் கற்பனை செய்யவேண்டியதில்லை. ஆற்றுப்பாசனப் பகுதிகளைப் போல் பசுமையில்லை, அவ்வளவுதான். மழையும் கிணற்றுப்பாசனமுமே விவசாயத்தின் ஆதாரம். எம்.ஜி.ஆர் காலத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால் வறட்சியின் காரணமாக பத்தாண்டுகளுக்கு மேல் அதில் நீர் வரவில்லை. இப்போது வருஷாவருஷம் எதோ பேர் பண்ணுகிறார்கள்.