Posts

Showing posts from July, 2014

எட்டாவது கன்னி

மே கமற்ற நீலவானத்தின் உச்சியில் சூரியன் தகிக்கையில் தெற்கே நீளும் தடத்தில் அவர்கள் வந்தார்கள். புளியமரத்தடியில் படுத்திருந்த செம்மி நாயும் கறுப்பு நாயும் எழுந்து குலைக்க முன்னால் வந்த மூத்தவனின் அதட்டலுக்கு குரைப்புகள் மெல்ல அடங்கின. கவையைப்போல் முக்கில் தடம் இரண்டாக பிரிய மேற்கில் குறுகிய வீதியும் கிழக்கில் பெரிய வீதியும் நீண்டன. நிதானித்த மூத்தவன் தலைச்சுமையை சமனாக்கியவாறு கிழக்குப்பக்க வீதியில் நடந்தான். பின்னால் வந்தவன் சும்மாடு கூட்டி பெரிய சாக்குப்பையை வைத்திருந்தான். இடுப்பில் குழந்தையோடு கடைசியாக நடந்தவளின் தலையில் துணிமூட்டை இருந்தது.

புகைப்பதைக் கைவிடுதல்

Image
                                                  சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கைவிட்ட 272 வது நாளில் அதைப் பற்றிய தன் அனுபவங்களை எழுதியிருக்கிறார் ஓரான் பாமுக். புகைப்பழக்கத்தைக் கைவிடுதல் என்ற அந்தக் கட்டுரை அவருடைய other colours தொகுதியில் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன் அதை வாசிக்கையில் எப்போதாவது புகைப்பழக்கத்தை கைவிட்டால் நாமும் இதைப்போன்ற ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று ஒரு கணம் நினைத்துவிட்டு மறந்துவிட்டேன். “மறந்துவிட்டேன்” என்பதற்குக் காரணம் என்றைக்குமே புகைப்பதை கைவிடமுடியாது என்ற நம்பிக்கை வெகு ஆழமாக எனக்குள் இருந்தது. சிகரெட் இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை.கடந்த பத்துப் பனிரெண்டு ஆண்டுகளில் புகைக்காமல் இருந்த அதிகபட்ச நேரம் துபாயிலிருந்து மாண்டிவீடியோவிற்கு பயணித்த பதினைந்து மணி நேரம்தான்.