அறியாமை(ignorance)- மிலன் குந்தெரா நாவல்
வயோதிகத்தை அடைந்துவிட்ட மேற்கத்திய இலக்கிய நாவலாசிரியர்கள் பெரும்பாலோனோர் நாஸ்டலாஜியாவிற்கு ஒரு பயணத்தை தங்கள் நாவலின் வழியாக நிகழ்த்திப்பார்க்கிறார்கள் போல..உடனடியாக நினைவுக்கு வருவது உம்பர்த்தோ ஈகோவின் “The mysterious flame of queen lona".மேலும் இலக்கியப்புனைவு நாஸ்டலாஜியாவிற்குத் திரும்புதலை எப்போதும் விரும்பத்தக்கதாக, ஆறுதலூட்டக்கூடிய தற்கணத்தின் துயரிலிருந்து விடுபடும் மீட்சியாக பயின்றிருக்கிறது.கடந்தகாலத்திற்குள் நம் மனம் செல்லும் பயணங்களைப் போல் எளிதாக நம்மால் எதிர்காலத்தினுள் பயணிக்க முடிவதில்லை.ஏனெனில் எதிர்காலம் நமக்கு கனவுகளாய் மட்டும் எஞ்சுகிற...