இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்ச்சிறுகதையின் திசைவெளிகள்-ஐந்து முதல் சிறுகதைத் தொகுப்புகள் மீதான பார்வை

படம்
மொழிக்குள் புதிதாக ஒரு சிறுகதையாசிரியர் நுழையும்போது அவருடைய பிரத்யேக உலகத்தின் வண்ணங்களும் வாழ்க்கையின் மீதான அவருடைய பார்வைகளும் மொழித்திரட்சிக்குள் ஊடுருவும் ரசவாதத்தை அவ்வடிவத்தின் வாசகனாகவும் எழுத்தாளனாகவும் தொகுத்தறிவது அகவிரிவையும் வாசிப்பின்பத்தையும் அளிக்கும் இலக்கியப் பயிற்சியாக இருக்கிறது.

குறளி

“ என்ன மோகன், ஏதாவது விசாரிச்சயா?” பதினைந்து நாட்களில் ஏகப்பட்ட தடவை செண்பா கூப்பிட்டுவிட்டாள். அவளுடைய அலைக்கழிப்பும் தவிப்பும் புரிகிறதென்றாலும் இந்த விஷயத்தைக் கடக்க முயற்சி செய்யாமல் இன்னும் ஏங்குவதால் மூர்த்தி உயிரோடு திரும்பப்போவதில்லை.   அவள் கூப்பிடும்போதெல்லாம் நினைவுகள் பலதும் கூடி துயரத்தைப் பெருக்கிவிடுகின்றன. நோண்டி நோண்டிப் புண்ணைப் பெரிதாக்கி சீழ்பிடிக்க வைக்கவேண்டாமென்று கொஞ்சம் கடுமையாகவே அவளிடம் சொன்னேன்.