Posts

Showing posts from April, 2013

இல்லா ராகத்தின் எதிரொலி

Image
                                       ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு அகவெளி அல்லது சொற்களின் நிலவெளி ஒன்றிருக்கிறது.மொழியின் வீச்சாலும் குறுகத்தரித்து விரிப்பதாலும் கவிதைகளின் நிலவெளி ரொம்பப் பெரியது மட்டுமல்ல, இது நாம் இன்னும் அறிந்திருக்காத பிரதேசங்களின் மர்மங்களைக் கொண்டது.இந்தப் பெரியது எனபது சமயத்தில் பிரபஞ்சமளவிற்குகூட இருக்கும்.ஆனால் கவிதையின் இந்தப் பிரத்யேக நிலவெளி என்பது சுருங்கி விரியும் தன்மை கொண்டது.ஒரு கவிதையை நான்காவது முறை வாசிக்கும்போது அது மூன்றாவது முறை வாசித்ததுபோல இல்லாமல் வேறுமாதிரி இருக்கிறது என்பதிலிருந்து இந்த சுருங்கி விரியும் தன்மையை புரிந்துகொள்ளலாம். கவிதையின் வினைபுரியும் தன்மை என்பது ஒரு முடிவிலியாதலால் ஒரு உயிர்ப்புள்ள கவிதை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் மறுவாசிப்பிற்கான சில உள்ளீடுகளை உற்பத்தி செய்கிறது.இந்த உள்ளீட்டை நாம் திரும்பவும் கவிதைக்குள்ளேயே செலுத்துகிறோம்.கவிதைக்கு உள்ளேயிருந்து கிடைக்கும் இந்த உள்ளீடு மட்டுமல்ல,புறத்திலிருந்து பெற்று நாம்...