இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அங்கே நீங்கள் நலமா?

படம்
சமீபத்தில் ஒரு வானொலி நிகழ்ச்சி.. நேயர்கள் தங்கள் மனநலம் மற்றும் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளை ஒரு மருத்துவருடன் கலந்துரையாடுவது.முதலில் அவரை ஒரு மருத்துவராக வே என்னால் உணரமுடியவில்லை..அவ்வளவு தெளிவான ஆங்கிலத்தில் , இனிமையான , ஆறுதலூட்டும் குரலோடு ஒரு ஆகச்சிறந்த வானொலித் தொகுப்பாளனின் திறமையோடு அவர் பேசியதைக் கேட்டவுடன் அந்த நிகழ்ச்சியை கேட்பதலிருந்து வெளியேற முடியாதவனானேன்.

பிளம் பழங்களின் நிலம்

படம்
                                                  பிளம் பழத்திற்கு தமிழில் நேரிடையான பெயர்ச்சொல் இருக்கிறதாவென்று தெரியவில்லை.படங்களைப் பார்க்கும்போது பிளம் பழங்கள் ஒரு பார்வைக்கு திராட்சைகளைப் போலவும் இன்னொரு பார்வைக்கு இலந்தைப்பழம் போலவும் தோன்றுகின்றன.பிளம் உற்பத்தியில் இந்தியாவிற்கு ஒன்பதாவது இடம் என்று விக்கிப்பீடியா சுட்டுகிறது.மூன்றாவது இடத்தில் இருக்கிறது கிழக்கு ஐரோப்பிய நாடான ரோமானியா.ஹெர்த்தா முல்லரின் "The Land of Green Plums" நாவல் முழுக்க பழுக்காத ரோமானியாவின் பச்சை பிளம் பழங்கள் விரவிக்கிடக்கின்றன.

இருளில் மறைபவர்கள்

அவனுடைய தூரநிலத்துக் கிராமத்திலிருந்து ஏராளமானவர்கள் இந்த நகரத்திற்கு பிழைக்க வந்திருந்தார்கள். முழுக்காற்சட்டை அணியத்துவங்கும்,மீசை முளைக்கும் பருவத்தில் அவர்களின் தடத்தில் இவனும் வந்தான்.உழைப்பவனை இந்த ஊர் கைவிடுவதில்லை என்ற பேச்சு இவனுக்கும் உண்மையானது.எத்தனையோ பொறுப்புகளை சுமந்துகொண்டு ஏராளமான மனசஞ்சலங்களோடு இங்கே வந்த விடலைப் பையன் இப்போது பொறுப்புகளை நிறைவேற்றும் முதிர் இளைஞனாகி விட்டான்.