Posts

Showing posts from July, 2013

ஏகம்-அநேகம்-எழுத்து

Image
                                                                      அ ரங்கநாதனின் கதைகளை ஆழம்போய் அறிவதற்கு அப்புத்தகத்தைக் கையில் வைத்திருக்கும் வாசகனுக்கு ஒரு முதிர்ச்சி நிலையும் பொறுமையும் தேவைப்படுகிறது..இன்னொரு விதமாக சொல்ல வேண்டுமென்றால் ஒட்டுமொத்தமாக அவர் கதைகளை வாசிப்பதைவிடவும் வெவ்வேறு கால இடைவெளிகளில் வாசிப்பதும் அசைபோடுவதுமான பயிற்சியைக் கைகொள்ளும்போது இக்கதைகள் தமது உட்பாதைகளைத் வாசகனுக்கு முழுக்கத் திறந்துவைக்கத் தொடங்குகின்றன.