இடுகைகள்

ஏப்ரல், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒன்று, எப்போதும் அதன் லட்சிய வடிவத்திலேயே நிகழ்வதில்லை

படம்
தற்குறி/தற்குறிக் கூட்டம் என்று வசை பாடப்பட்டாலும் நிகழும் தமிழக அரசியல் வரலாற்றின் உந்துவிசை விஜய்தான். சாதகமாகவோ பாதகமாகவோ அவர் ஒரு phenomenon. சுயவிருப்பத்தின் பேரில் கட்சி தொடங்கினார் அல்லது வலதுசாரி சக்திகளின் கள்ளக் கூட்டாளியாக இறக்கிவிடப்பட்டிருக்கிறார் என்பதெல்லாம் இரண்டாம்பட்சமானவை. சொகுசான அரசியல்வாதி, எழுதிக் கொடுத்ததைப் பேசுகிறார், சுய சிந்தனைத் இல்லை என்ற விமர்சனங்களில் உண்மையுண்டு. ஆனால் ஒரு ஆளுமையின் வெளிப்பாடு அல்லது ஒரு நிகழ்வு என்பது அதன் இலட்சிய வடிவத்திலேயே (ideal state) எப்போதும் நடப்பதில்லை (விடுதலைச் சிறுத்தைகளின் மீது இருபதாண்டுகளுக்கு முன்வைக்கப்பட்ட விமர்சனத்தை நினைவு கொள்ளலாம்). தோற்றமும் அரைகுறையாகவும் பிழைகளோடு இருந்தாலும் லட்சிய நிலை நோக்கி முன்னகர்வது முக்கியமானது. தூய்மையானவர்களே அரசியலுக்கு வரவேண்டும் என்பது இன்றைக்கு காகிதத்தில் மட்டும் எழுதப்பட்டிருக்கும் லட்சிய நிலை. இன்றைய நடைமுறை அரசியலில் தூய்மைக்கு என்ன தொடர்பு இருக்கிறது? ஆனால் ஒரு முரணாக, இங்கு ஏற்கெனவே ஊழல்வாதிகளாக, கறை படிந்தவர்களாக இருப்பவர்கள், தவெக வின் வருகையை, அதன் இருப்பைக் கண்டு அஞ்ச...

சிறிய மகிழ்ச்சிகளும் பெரிய துயரங்களும் - கே.என்.செந்தில் கதையுலகம்

படம்
செந்திலின் கதைகளைக் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்கிறேன். “இரவுக் காட்சி” தொகுப்புக்கு ஒரு சிறிய விமர்சனக் குறிப்பு எழுதினேன். இரண்டாவது தொகுப்பான “அரூப நெருப்பு” குறித்து சென்னையில் நடந்த அறிமுகக் கூட்டத்தில் பேசியதுடன் “நெருப்பில் உருப்பெறும் இருட்சித்திரங்கள்” என்னும் தலைப்பில் காலச்சுவடு இதழில் கட்டுரையாகவும் எழுதினேன். பிறகு ஐந்து நெடுங்கதைகளைக் கொண்ட “அகாலம்” தொகுப்புக்கு பின்னட்டைக் குறிப்பு எழுதப் பணித்தார். இப்போது இதுவரையான கதைகளைத் தொகுக்கும்போது பின்னுரை எழுதக் கூறினார். இப்படியாக செந்திலின் கதையுலகத்தோடு தொடர்ச்சியான உரையாடலில் இருப்பதற்கான வாய்ப்புகள் இயல்பாகவே அமைந்து விடுகின்றன.

நாயகனின் வருகைக்கான தமிழர்களின் முடிவுறாத ஏக்கம்

படம்
தி யங் போப் (The Young Pope) என்றொரு நெடுந்தொடர், கிறிஸ்துவ இறையியல், மதம் குறித்த தத்துவார்த்த விவாதங்கள், வாட்டிகனின் கட்டிடக்கலை போன்றவற்றில் ஆர்வம் இருந்தால் இத்தொடர் உங்களுக்குப் பிடிக்கக்கூடும்.