இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

படம்
கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) ஜெர்மானிய இயக்குனர். இதுவரை பதினொரு படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் அவருடைய வுல்ப்ஸ்பர்க் திரைப்படத்தைப் பார்த்தபோது அது வரிசையாக அவருடைய மற்ற படங்களிடம் அழைத்துச் சென்றது. அறுபத்தைந்து வயதாகும் பெட்ஸோல்டு இதுவரை பதினொரு படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் ஏழு திரைப்படங்களைக் பார்த்தேன். அந்த ஏழின் வழியாக பெட்ஸோல்டு கதையுலகத்தை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. அவருடைய சமீபத்திய திரைப்படம் Miroirs No. 3 இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது

சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்

படம்
                                                    எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவலில் பக்கிரி, ரத்தினம் என்ற இரு நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை வழியாக கரிசல் நிலத்தில் அந்த கலை அடைந்திருந்த பொற்காலமும் பிறகு அதன் சிதைவும் சொல்லப்பட்டிருக்கின்றன. பக்கிரியும் ரத்தினமும் தங்கள் குழுவோடு கரிசல் நிலத்தின் வெவ்வேறு ஊர்களில் சஞ்சரிக்கிறார்கள். திருவிழாவுக்கு வாசிக்கப் போன இடத்தில் நேர்கின்ற தகராறில் தப்பியோடி அலைந்து திரிந்து இறுதியில் பிடிபடுகிறார்கள். இந்த தப்பியோடலின் இடையில் நினைவோடையாக கலைஞர்களின் வாழ்க்கை அனுபவங்கள் துண்டான காட்சிகளாலும் பல கிளைக்கதைகளாலும் சொல்லப்படுகின்றன. பக்கிரியின் கதை வழியே பல நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கையில் இருந்த ஒளியையும் இருளையும் காண்கிறோம். எளிய சாதாரண பின்புலங்களில் இருந்து மேதமையோடு எழுந்து வரும் இந்தக் கலைஞர்களில் பலர் வித்யாகர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பொற்காலம் போயியாற்று...

உள்ளுறைந்த கடல் (The sea inside)

படம்
ம னிதவுயிர் பூமியில் பிறக்கும்போது என்ன விதமான உரிமைகளோடு பிறக்கிறது என்பதற்கு பலவிதமான விளக்கங்கள் இருக்கலாம். ஆனால் உயிர்வாழ்வதற்கான உரிமை மட்டும் பூமியில் அந்த உயிரின் முதல் மூச்சின் சுவாச இழையின் வழியே தன்னியல்பாக மானுடத்திடமிருந்து பெறப்படுகிறது. ஆன்மவாதிகள் (animist) இதனை ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையான உயிர்களுக்கும் விரித்துச் சொல்லக்கூடும். இந்த உரையாடலுக்காக நாம் மனிதர்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். பிறப்பதே வாழும் உரிமைக்கான சாட்சி. அந்த உரிமை ஒரு கடப்பாட்டைப்போல உலகின் வாழும் மனிதர்களாலும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. நாகரீக செயல்திட்டம் தன் வளர்ச்சியினூடே மனிதர்களுக்கு தன்னை அழித்துக்கொள்ளும் சுயவுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. இடையறாத உரையாடலின் காரணமாக இன்றைக்கு சூழலின் தன்மைக்கு ஏற்ப சில தளர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. இது மனித இருப்பின் பெறுமதி என்ற நாணயத்தின் ஒரு பக்கம். இன்னொரு புறத்தில், உயிர்களுக்கு வாழ்க்கைப் போராட்டம் இருக்கிறது, தற்கொலைகளின் மூலம் மனிதர்கள் வாழ்க்கையைத் துறக்கிறார்கள். கொலை புரிகிறார்கள். கொடுங்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்...