Posts

Showing posts from May, 2018

நாவலின் தொடக்கமும் முடிவும்-மிலோரட் பாவிச்

Image
                                             தன்னுடைய முதல் நூறு வாசகர்களின் முகங்களைக் காண போர்ஹெஸ் ஆவலாக இருந்தார். என்னுடைய ஆவல் வேறுபட்டது. கடைசி நூறு வாசகர்களின் முகங்களை அல்லது பரிதாபகரத்தைக் குறைவுபடுத்திச் சொல்ல வேண்டுமெனில் நாவல் வடிவத்தின் கடைசி நூறு வாசகர்களின் முகங்களைக் கண்டுவிடக்கூடிய சவாலின் முன் நாமெல்லோரும் நிற்கிறோமில்லையா?

வாசிப்பு- கார்லோஸ் புயந்தஸ்

Image
டான் கிகோட்டே ஒரு வாசகன். அல்லது, ஒருவேளை இன்னும் முக்கியமாக அவனுடைய வாசிப்பே அவனுடைய பித்து. வாசிப்பின் பித்தால் பீடிக்கப்பட்ட டான் கிகோட்டே தான் வாசித்த விஷயங்களை- வீரமரபு சார்ந்த புத்தகங்களை- யதார்த்தமாக மாற்ற விரும்பினான். ஆட்டிடையர்களின், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களின், விடுதிப்பணியாளர்களின், மோசமான புகழ் கொண்ட பணிப்பெண்களின், குற்றவாளிக் குழுக்களின் நிஜ உலகமோ டான் கிகோட்டேவின் மாயைகளைப் பூர்த்தி செய்யாமல் அந்தப் பாவப்பட்ட கனவானை களைப்படையச் செய்து காயப்படுத்தித் துவைத்தெடுக்கிறது.நிஜ உலகத்தால் தனக்கு அடிகள் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் டான் கிகோட்டே ராட்ஷதர்களைக் காண வலியுறுத்துகிறான். அங்கே காற்றாடிகள் மட்டுமே இருக்கின்றன. அவன் அவற்றைப் பார்க்கிறான். ஏனெனில் அவற்றைப் பார்க்கச்சொல்லித்தான் அவன் புத்தகங்கள் அவனிடம் கூறின.

கிண்டில் மின்னூல்கள்

என்னுடைய உலகில் ஒருவன் நாவல் மற்றும் புலியின் கோடுகள் கட்டுரைத் தொகுப்பை வரும் மே 11 வரை அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.