இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆமையின் சன்னதக் காலம்

படம்
  ஒரு புதிய வார்த்தை வந்திறங்காத நாவில் காலாதீத மூப்பின் அசைவின்மை யாருமற்ற பிரதேசத்தில் என்னோடு மட்டுமே முணுமுணுக்கிறேன் கடைசியாக முத்தமிட்டவள் (அது ஆயிற்று கன காலம்) சொல்லிப்போனாள் ஏழுலகங்களின் தூரத்துக்கு ஆழம்கொண்ட பள்ளத்தாக்கினுள் விழுந்துவிட்ட ஒரு நில ஆமை நீயென்று அர்த்தங்களை இழந்துவிட்ட சொற்களைவிட மெளனத்துக்கு கூடுதல் அர்த்தமுண்டு என்பதை நம்புகிற நீயேதான் தன்மயக்கத்தில் மூளும் சன்னதத்தின் சொற்கள் வேறு லோகங்களிலிருந்து வருகின்றன என்பதையும் நம்புகிறாய் காத்திருக்கையில் ஒன்று வராமலேயே போய்விடாது அது வந்துகொண்டே இருக்கிறது… ஒருமுறை இறங்கியது திரும்பவும் பூமிக்கு இறங்கும் என்பது மூடநம்பிக்கையல்ல, அப்படி அது இறங்கும்போது ஏழுலகங்களின் தூரத்துக்கு ஆழம்கொண்ட பள்ளத்தாக்கை கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறிக் கடந்துவிட்டிருக்கும் ஆமை.

கருத்துமுதல்வாத மக்களும் பொருள்முதல்வாத அரசும்

முதல்வரின் தனிச் செயலராக (அரசியல் பிரிவு) ராதன் பண்டிட் வெற்றிவேல் என்ற ஜோதிடர் நியமிக்கப்பட்டது சமூக ஊடகங்களில் சர்ச்சையாகி இருக்கிறது. இவர் தவெகவின் செய்தித் தொடர்பாளர் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக இத்தகைய பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும்போது அரசின் விதிகளும் வழிகாட்டுதல்களும் நெறிமுறைகளும் என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த நியமனத்தைக் காணும்போது பொறுப்புக்கு வருகிறவரின் கல்வி மற்றும் நிர்வாகத் அனுபவம் ஆகிய தகுதிகளுக்கு அப்பால், இது முழுக்கவும் முதல்வரின் அதிகாரத்தால் நியமிக்கப்படக்கூடிய பதவியாகத் தெரிகிறது.

பிறழ் – நிஜந்தன் - ஒரு சாட்சியம்

படம்
மனப்பிறழ்வு வாழ்க்கையின் வெவ்வேறு காலங்களையும் இடங்களையும் சம்பவங்களையும் இணையாக வைத்து சிதறுண்ட தொனியில் சொல்லப்பட்டதுபோல தோற்றங் கொடுத்தாலும் வாசிப்புக்குப் பிறகு அர்த்த முழுமையையும் காட்சி முழுமையையும் கொடுக்கக்கூடியதாகவே அமைந்து வந்திருக்கிறது பிறழ் குறுநாவல்.