இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்தாளருக்கான மதிப்பூதியம் - ஒரு விவாதம்

படம்
1.  இந்த விஷயத்தை இப்போதைக்கு நான் முழுக்கவும் புறவயமாகவும்( Objective) ஆகவும் கொள்கையளவிலுமே (In principle) வைத்துப் பேச நினைக்கிறேன். தமிழில் பதிப்புத் தொழிலில் தேனும் பாலும் ஓடவில்லை என்று புரிகிறது. ஆனால் அது நிஜமாகவே மோசமான சூழலில் இருக்கிறதென்றால், எவ்வளவு மோசமான சூழலில் இருக்கிறது என்பது, பதிப்பாளர்கள் தரவுகளின் மூலம் வெளிப்படையாக வைக்காதவரை நமக்குத் தெரியப்போவதில்லை. ஒரு பதிப்பகம் நீண்ட காலம் தொழிலில் இருந்தால் நஷ்டத்தில் இயங்கவில்லை என்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்ளலாம்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது நிகழ்வு - 2025

படம்
டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் கோவை ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங்க அரங்கில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – 2025 விருது நிகழ்வில் கலந்துகொண்டது நிறைவையும் ஊக்கத்தையும் அளித்தது. ரமேஷ் பிரேதன் மறைந்துவிட்ட சூழலில் அந்த விருதுக்கான தொகையை ஐந்து இளம் எழுத்தாளர்களுக்கு பட்டயத்தோடு பகிர்ந்து அளித்ததின் மூலம் சரியான விதத்தில் முன்னெடுத்துச் சென்று நிறைவு செய்திருக்கிறார்கள்.

கவிதையில் அர்த்தமும் அனுபவமும்- துரிஞ்சி கவிதைத் தொகுப்பு குறித்து

படம்
கல்விப்புலம் சார்ந்த மேற்கத்திய இலக்கிய விமர்சன மரபில் உருவான ரஷ்ய உருவவாதம் (Russian Formalism) மற்றும் புது விமர்சனம் (New Criticism) ஆகிய இலக்கியக் கோட்பாடுகளின் சில முக்கிய அம்சங்களை மீள்பார்வை செய்துகொள்வது இலக்கிய விமர்சனத்தை இன்னும் நெருக்கமாக அணுகுவதற்கு உதவும். இவை புதிய விஷயங்கள் அல்ல, கல்விப்புலம் சார்ந்த விமர்சனத் துறையில் ஏற்கெனவே நூற்றாண்டாகப் புழங்குகிறவைதான். இலக்கிய விமர்சனத்தில் இவ்விரு கோட்பாடுகளும் இன்றைக்கு அவற்றின் ஆதார வடிவிலேயே பயிலப்படாவிட்டாலும், இவற்றிற்குப் பிறகு உருவாகி வந்த அமைப்பியல், பின் அமைப்பியல் போன்ற கோட்பாடுகளுக்கு அடிப்படைகளை வழங்கியிருக்கின்றன.

அசைவற்றுத் தெரியும் தூரத்து ஆறு

படம்
(வி. அமலன் ஸ்டேன்லியின் வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம் நாவல் குறித்த மதிப்புரை) நம்முடைய அன்றாட வாழ்க்கை தட்டையானது. திரும்பத்திரும்ப நிகழும் சாதாரணமான சம்பவங்களால் ஆனது. அதேநேரத்தில் கற்பனைக்கு நிகரான நாடகீய உச்சங்களை மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்வதின் சாத்தியத்தையும் முழுக்க மறுப்பதற்கில்லை. ஆனால் நம்முடைய நிகழ் வாழ்க்கையில் இந்த நாடகீய உச்சங்கள் குறைவாகவும் அரிதாகவும் நிகழ்கின்றன. புனைவோ எப்போதும் கூடுதலான நாடகீய உச்சங்களைக் கோருவதாக இருக்கிறது. பெருவிய நாவலாசிரியரான சாண்டியாகோ ரான்காக்லியோலோ தன்னுடைய ரெட் ஏப்ரல் என்னும் அரசியல் நாவலின் பின்னுரையில் “எல்லா நாவல்களையும் போலவே இந்தப் புத்தகமும் நடந்திருக்கக்கூடிய கதையை விவரிக்கிறது, ஆனால் இப்படித்தான் நடந்தது என்பதை இந்த ஆசிரியர் உறுதிப்படுத்தவில்லை” என்று குறிப்பிடுகிறார்.